சென்னை:
தமிழகத்தில் புறநகர் பயணிகள் ரயில்சேவை இன்றும் தொடங்கப்படாத நிலையில், சென்னையில் ஜூன் 1ந்தேதி முதல் மெட்ரோ ரயில் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில், மெட்ரோ ரயில் பெட்டிகள் அனைத்தும் குளிர்சாதனப் பெட்டிகள் (ஏசி) என்பதால், மெட்ரோ ரயிலை இயக்க மத்திய, மாநிலஅரசுகள் அனுமதி வழங்குமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
கொரோனா ஊரடங்கால் மார்ச் 21- முதல் சென்னையில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை ஜூன் மாதம் முதல் மீண்டும் தொடங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன், ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளி குறித்த அறிவிப்பும் வைக்கப்பட்டு வருகிறது. மேலும், மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு வாயிலை மட்டுமே உபயோகப்படுத்தவும், பயணிகள் அனைவரும், , தெர்மல் ஸ்கேன் சோதனைக்குப் பிறகு ரெயிலில் பயணம் செய்ய அனுமதிக்கவும் முடிவு செய்துள்ளது.
மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அனுமதி கிடைத்தால், ஜூன் 1-ந் தேதியிலிருந்து ரயில் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பிற மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ராஜ்தானி ரெயில்கள், விமானங்கள் இயக்க அரசு அனுமதிக்கப்பட்டு உள்ளதால், ஏ.சி. பெட்டிகளுடன் மெட்ரோ ரெயில்கள் சேவை தொடங்க அரசின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.