மும்பை: சீனா – அமெரிக்கா இடையே நடைபெற்றுவரும் வணிக யுத்தத்தால், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் பலன் பெறவுள்ளது என்கிறார் கட்டுரையாளர் ஆண்டி முகர்ஜி.
அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்படுவதாவது; இந்திய பெட்ரோகெமிக்கல் ராஜாவான முகேஷ் அம்பானி, தனது டிஜிட்டல் வணிகத்தை வெளிநாடுகளில் பட்டியலிட திட்டமிடுகிறார் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவிக்கிறது.
தற்போதைய நிலையில், சீனா – அமெரிக்கா இடையே தற்போது வணிக யுத்தம் நடைபெற்று வருவதால், சீனாவின் JD.com Inc. மற்றும் NetEase Inc. ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் தாய்நாட்டிற்கு அருகில் ஒரு பாதுகாப்பான நாட்டைத் தேடுகின்றன. சீனா – அமெரிக்கா இடையிலான டென்ஷன் அதிகரித்தால், அந்த நிறுவனங்களின் முடிவு வேறாக இருக்கும்.
ஹாங்காங் தொடர்பான சீனாவின் நடவடிக்கைகளால், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவின் மீது புதிய பொருளாதார தடைகளுக்கு திட்டமிட்டுவரும் நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்களை மற்றொரு பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டை நோக்கி இழுப்பதற்கு இதுவொரு சிறந்த தருணம்.
ரிலையன்ஸ் குழுமத்தின் இந்த வெளிநாட்டு முயற்சி, அந்தக் குடும்பத்தின் வழக்கத்தில் இல்லாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்தியாவில் சில்லறைப் பங்குகள் கலாச்சாரத்தைக் கொண்டு வந்தவர்கள் அவர்கள்.
கடந்த 1985ம் ஆண்டு, ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி, மும்பையில் ஒரு கால்பந்து மைதானத்தை வாட‍ைக்குப் பிடித்து, அங்கே பாலியஸ்டர் டெக்ஸ்டைல் துறைசார்ந்த பங்குதாரர்களின் மாநாட்டை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துறையில் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்னதாக நுழைந்திருந்தார். எனவே, முகேஷ் அம்பானியின் இந்த புதிய முயற்சி வர்த்தக உலகில் ஆச்சர்யம் கலந்து நோக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.