புதுடெல்லி: தீவிர உடல்நலப் பிரச்சினைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள், தேவையேற்பட்டால் ஒழிய, ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணிக்க வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.
அவர் கூறியுள்ளதாவது, “ரயில்வே அமைச்சகம், அனைத்துப் பயணிகளின் நலனையும் கருத்தில் கொண்டுள்ளதால், தீவிர உடல்நலப் பிரச்சினைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள், தேவையேற்பட்டால் ஒழிய, ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணிக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், இவரின் இந்த அறிவிப்பு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்திய வரலாற்றில், உலகளவில் ஒரு மாபெரும் மானிடப் பேரிடரை மோடி அரசு நிகழ்த்திவரும் வே‍ளையில், புலம்பெயர் தொழிலாளர்களை மனிதர்களாக மதித்து, அவர்களுக்கு காலத்தே தகுந்த ஏற்பாடுகளை செய்யாத நிலையில், இப்படியான அறிவிப்புகள் பொறுப்பற்றவை என்கின்றனர் அவர்கள்.