சென்னை:
ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியிருந்தது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘தமிழ் தான் இணைப்பு மொழி ‘ என அவர் பதிலளித்தார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தி திணிப்புக் கொதிரான நிலைப்பாட்டை முன்வைத்து கருத்து கூறியதற்காக அச்சுறுத்தமுனைவது கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.