வாஷிங்டன்: எச் – 1பி விசா விண்ணப்பத்திற்கான கட்டணத்தை அதிகப்படுத்த டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

இதன்மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில், தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளில் அமெரிக்க இளைஞர்களை ஈடுபடுத்தும் பயிற்சி திட்டங்களை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க தொழிலாளர் துறை செயலாளர் அலெக்சாண்டர் அகோஸ்டா தெரிவித்துள்ளார்.

ஆனால், எந்தளவுக்கு கட்டண உயர்வு இருக்கும் என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த கட்டண உயர்வு யாரை பாதிக்கும் என்பது மட்டும் தெளிவாகிறது.

இந்தவகை விசாவிற்கு, கடந்த காலங்களில் இந்திய மென்பொருள் நிறுவனங்கள்தான் அதிகளவில் விண்ணப்பித்தன. எனவே, கூடுதல் கட்டண உயர்வு, இந்திய நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என்பது தெளிவு.