லக அளவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.இதனால் பலரும் துணிந்து தங்கத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் மீது முதலீடு செய்வது சரியா என்ற நிலையில்  ஒரு சிறிய அலசல் பத்திரிக்கை.காம் வாசகர்களுக்காக

அமெரிக்காவும் தங்கம் விலையும்

அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் தங்கத்திற்கும் இடையிலான தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 2008-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் அமெரிக்கா டாலரின் மதிப்பை அதிகரிக்கச் செய்தன.இதனால் தங்கத்தின் மீதான  நாட்டம் குறைந்து தங்கம் விலை குறைந்தது.

ஆனால் தொடர்ந்து அமெரிக்கா அதிபரின் சில நடவடிக்கைகள் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்க்கூடிய வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. ஏனெனில் அமெரிக்க அதிபர் சீனாவை மட்டும் சீண்டவில்லை. இந்தியாவையும தொடர்ந்து சீண்டி வருகின்றார். எனவே டாலரின் மதிப்பு குறையும்போது இயல்பாகவே முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீதுதான் வருகிறது.
எனவே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகின்றது.

அமெரிக்கா – சீன வர்த்தகப் போர்

அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப் போர்  இரு தரப்பிலும் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்பு பொருளாதாராத்திலும் எதிரொலிப்பதும் ஒரு காரணமே.
அமெரிக்க – சீனப்  வர்த்தகப்போரின்  பதட்டம் ,அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து வரும் சூழ்நிலையில் நடப்பு மூன்றாவது காலண்டில் (ஜுலை முதல் செப்டம்பர்)1.5 சதவிகிதமாக மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு இந்த வார்த்தகப்போர் முடிவுக்கு வராது என்ற நிலையையே தோற்றுவித்துள்ளது.

சீனாவின்  நாணய குறைப்பு விளையாட்டு

உலக அளவில்  சீனா மட்டும் தங்கள் நாட்டின் மதிப்பை அவ்வப்போது கூட்டி குறைத்து விளை யாடும். சீனா கடந்த வாரம் அமெரிக்கா டாலருக்கு நிகராக யுவானின் மதிப்பை 7-ஆக இறக்கம் செய்ததும்  தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணம்.

இந்தியா

இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்ததால் தங்கம் இறக்குமதி குறைந்தது. ஆனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் விலையும் ஏற்றம் பெறுகிறது எனவே அமெரிக்க டாலர் மதிப்பு, அமெரிக்கா சீனா வர்த்தகப்போர், இந்தியாவின் தங்கம் இறக்குமதிக்கு அதிகமான வட்டி மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு என பால காரணிகளால் தங்கத்தின் ஆடுபுலி ஆட்டம் தொடரும். எனவே தங்கத்தின்  மீதான முதலீடை பிரித்து பிரித்து முதலீடு செய்வது சாலச்சிறந்தது

-செல்வமுரளி