சென்னை: தொழில் முதலீடுக்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்க ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு உடனான ஃபோர்டு நிறுவனத்தின் 30 ஆண்டுகால உறவை புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு , சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, ஏராளமான முதலீடுகளை பெற்ற நிலையில், தற்போது சிகாகோவில் முகாமிட்டு முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பேசி வருகிறார். அதன்படி பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் தொழிற்சாலையை தொடங்கும்படி வலியுறுத்தினார். தமிழ்நாட்டுடன் ஃபோர்டின் மூன்று தசாப்த கால கூட்டாண்மையை புதுப்பித்து, உலகிற்கு மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம் என தனது எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
முன்னமாக அமெரிக்காவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் பல இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. சென்னை பற்றி நீங்கள் அனைவரும் நன்றாக அறிந்திருப்பீர்கள். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. 48 விழுக்காடு நகரமயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் அதிகளவில் நகரமயமாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.
நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி மையங்கள் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மனிதவளங்கள் மற்றும் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது என்றும் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் சுமார் 45 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.