டிரம்ப் ஆட்சி- இந்தியாவிற்கு சாதகமா பாதகமா?

Must read

டிரம்ப் பதவிக்காலத்தில், சீனாவுடனான உறவைப் பலப்படுத்திக்கொண்டே, ரசியாவுடனான நல்லுறவைப் பேண அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணி வருகின்றது, அதேவேளையில், சீனாவுடன் கசப்புணர்வுடன் இருந்து வருகின்றது.

டிரம்பின் பதவியேற்பு இந்தியாவிற்கு சாதகமா பாதகமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
டிரம்ப், அமெரிக்க கம்பெனிகள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதை தடுக்கவுள்ளது, இந்தியாவின் “மேக் இன் இந்தியா” திட்ட்த்தை பாதிக்கும்.

அமெரிக்கா- ரஷ்யா உறவு:

கம்யூனிச ஆட்சி மறைந்து, ஒன்றுபட்ட ரஷ்யா உடைந்ததில் இருந்தே அமெரிக்க- ரஷ்யா உறவு மேம்பட்டு வருகின்றது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக இந்த உறவில் விரிசல் நீடித்து வருகின்றது.

விளடிமர் புடினின் வலுவான, சமரசமில்லாத தலைமையில் சிரியாவுடன் இணைந்து பிரிவினைவாதிகளின் முகாம்களைக் குண்டுவீசி தகர்த்து வருகின்றது. ரஷ்யா உக்ரைனுடன் போரில் ஈடுபட்டது. ஸ்னோடனுக்கு அடைக்கலம் கொடுத்தது, அமெரிக்காவை எதிர்க்கும் தலிபான்களுடன் நல்லுறவு கொள்ளுதல் போன்ற செயல்கள் அமெரிக்காவை கோபம் கொள்ளச் செய்தது. மேலும், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடும் இருந்தது.
ஆனால், டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியைப் புடின் வரவேற்றுள்ளார். தற்போது, இரண்டு நாடுகளும் மிகுந்த கவனத்துடன், அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றன.
டொனால்ட் டிரம்ப், தமது ட்விட்டர் பக்கத்தில், “ ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணுவதில் தவறில்லை” எனக் கருத்து வெளியிட்டு இருந்தார்.

அமெரிக்கா- சீன உறவு:

மாவோ சீடாங் அவர்களால், சீனக் குடியரசு நாடு உருவாக்கப் பட்டதில் இருந்தே, அமெரிக்காவுடனான உறவினை மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகின்றது. 1950ல் வடகொரியா தென்கொரியாவை படையெடுத்த்து முதல் 1953ல் தைவான் பிரச்சனை, திபெத் எழுச்சியென இரு நாடுகளின் உறவு சில கசப்புகளை சந்தித்து இருந்தாலும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சீனாவுடனான உறவை மேம்படுத்துவதில் முனைப்பு காட்டினார்.
குறிப்பாக, 2011ம் ஆண்டு, ஹிலாரி கிளின்டன், ஆசிய-பசிஃபிக் பகுதியில் முதலீடு செய்வதை அதிகரிக்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.
சீன ஜனாதிபதி சீ- ஜின்பிங்க்யை ஒபாமா காலநிலை மாற்றம்குறித்து பேச அழைப்பு விடுத்தார். 2014ம் ஆண்டு கார்பன் மாசைக் குறைக்க இரு நாடுகளும் இணைந்து அறிக்கை வெளியிட்டன.
தெற்கு சீன கடலில் தமது ஆதிக்கத்தை செலுத்த விழைந்தபோது தைவான், வியட்னாம் மற்றும் மலேசியாவிற்கு ஆதரவாய் அமெரிக்கா குரல் கொடுத்த்து, சீன-அமெரிக்க உறவு விரிசல் கண்டது. எனினும், செப்டம்பர் 2016ல் இருநாடுகளும் தமது உறவினை பலப்படுத்தும் திட்டத்தைத் தீட்டின.
ஆனால் டொனால்ட் டிரம்ப் சீனாவை கடுமையாக விமர்சித்து வருகின்றார். எனவே சீனாவுடனான உறவு சீர்குலையும் வாய்ப்பு அதிகம்.

இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா டிரம்ப்-ன் நடவடிக்கை ?

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் தற்போதைய கொள்கைகளை மாற்றாமல் தொடர்ந்து கடைப்பிடிப்பாரென்றால், இந்தியா அதன் மூலம் மிகுந்த பலன் அடையும்.
2015ம் ஆண்டு அமெரிக்காவுடன், 23 பில்லியன் டாலர் வர்த்தகம் இந்தியா பெற்றது.
சமீபத்தில், டிரம்ப், “ எனது தலைமையிலான அரசில், இந்திய-அமெரிக்க உறவு பலப்பட நல்ல வாய்ப்பு உள்ளது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

எனினும், அது எப்படி சாத்தியம் என இந்தியர்கள் புருவம் உயர்த்தியுள்ளனர். அமெரிக்க கம்பெனிகளை இந்தியாவில் முதலீடு செய்யத் தடுப்பது, இந்தியர்களுக்கு விசா வழங்க மறுப்பது எனத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வெற்றிபெற்றுள்ள டிரம்ப், இந்தியாவிற்கு சாதகமா பாதகமா என்பதை காலம் நமக்கு உணர்த்தும்.

More articles

Latest article