அமெரிக்காவின் 45வது அதிபரானார் டிரம்ப்! மோடி வாழ்த்து!!

Must read

வாஷிங்டன்,

மெரிக்காவின் 45-வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார்.  வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கோலாகல நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றார். அவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டெனால்டு டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து  டிரம்ப்  அமெரிக்க அதிபராக தேர்வானார்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற  நடந்த பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 45- வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். துணை அதிபராக பென்ஸி பதவி ஏற்றார்.

இவர்களுக்கு அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமெரிக்கர்களின் பலத்த கரகோஷத்திற்கிடையே அதிபராக டிரம்ப் பதவியேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர்கள், இந்திய தூதர் நவ்ஜேத் சிங்ஷர்மா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் அமெரிக்க தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

பதவிஏற்ற டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

அமெரிக்காவை மேலும் வலுப்படுத்துவது தான் எனது நோக்கம் என்றும் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றும் கூறினார்.

மேலும்  அமெரிக்காவின் எல்லையைப் பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், அமெரிக்கா எப்போதும் முதலிடத்தில் நிலைத்திருக்கும் என்றார்.

எனது அரசு எடுக்கும் அனைத்து முடிவும் மக்களின் நலன் சார்ந்ததாகவே இருக்கும், அதிகாரம் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்றார்.

மேலும் இது பதவியேற்பு விழா அல்ல, மக்களுக்கான விழா.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‛அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு எனது வாழ்த்துகள். வரும் காலங்களில் அமெரிக்கா உங்கள் தலைமையில் பெரும் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன். இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்பெற சேர்ந்து பணியாற்றுவோம்’ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப்க்கு முன்னாள் அதிபல் ஒபாமா தனது மனைவி மிச்செலுடன் வாழ்த்து தெரிவித்தபார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article