சென்னை:
மிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி உள்ளது. வரும் 29ந்தேதி வரை 25 நாட்கள் நீட்டிக்கும் இந்த அக்னி நட்சத்திர வெப்பத்தில் கொரோனா பரவலின் தாக்கம் அழியும் என்று மக்களிடையே நம்பக்கை எழுந்துள்ளது.

சித்திரை மாதம் 21-ம் தேதி  (மே 4ந்தேதி) முதல் வைகாசி மாதம் 14-ம் தேதி (மே 28 ஆம் தேதி )வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை “அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படு கிறது. சித்திரை மாதம், பரணி 3-ஆம் பாதத்தில்  சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.
சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் என்னும் நட்சத்திர மண்டலப் பகுதிகள் வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணா்கிறோம். இந்த காலகட்டத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் என கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் 21 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். இந்த அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். 21-ஆவது நாளில் வெயில் உச்சத்தைத் தொடும். அதன்பிறகு படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையத் தொடங்கும்.
நிகழாண்டில் அக்னி நட்சத்திரம் திங்கள்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை மொத்தம் 25 நாள்கள் நீடிக்கும். கத்திரி வெயிலின் போது, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அனல் காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அக்னி வெயிலை நம்பிதான் அரசுகளும் கொரோனா தளர்வுகளை அறிவித்திருக்கிறதோ…