தஞ்சாவூர்
தஞ்சாவூர் அரசு சுற்றுலா மாளிகையில் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து ஒரு மணி நேரம் தனியே பேசியது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
நேற்று தஞ்சாவூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் பிளாக் 1 ல் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் பிளாக் 2 ல் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கமும் தங்கி இருந்தனர். வைத்திலிங்கம் நேற்று காலை 10 மணிக்கு பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அவருடன் அதிமுக மாணவர் அணி செயலாளர் காந்தி உட்பட 20 பேர் சென்றனர்.
சிறிது நேரத்தில் அதிமுகவினரும், அறையில் இருந்த பாஜகவினரும் வெளியே வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் வைத்திலிங்கமும் பொன் ராதாகிருஷ்ணனும் தனியாக பேசி உள்ளனர். இந்த சந்திப்பு குறித்த் இருவருமே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்த போதிலும் வேறு விதமான ஊகங்கள் இரு கட்சியின் தர்ப்பில் இருந்தும் வெளியாகி உள்ளன.
வைத்திலிங்கம் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக இரு தரப்பில் இருந்தும் அதிகார பூர்வமற்ற தகவல்கள் வந்துள்ளன. வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி பிரதமர் மோடி தஞ்சாவூருக்கு வர இருக்கிறார். அந்த சமயத்தில் மோடி முன்னிலையில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைவார் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த செய்தி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது