ரஜினியின் சந்திரமுகி, சிம்பு நடித்த ஒஸ்தி, பிரபு தேவா நடித்த தேவி, அனுஷ்கா நடித்த அருந்ததி போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தவர் சோனு சூட். தொடர்ந்து அதேபோன்ற கதாபத்திரங் களில் நடிக்கவே அவருக்கு அழைப்பு வந்துக்கொண்டிருந்தது. இதெல்லாம் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன் அவரது நிலைமை தற்போது அந்த நிலைமை தலைகீழாகிவிட்டது.
கொரோனா ஊரடங்கின்போது புலம் பெயர்ந்து வந்து தவித்த பல்லாயிரக் கணக்கானவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு பஸ், ரயில், விமானத்தில் அனுப்பி வைத்தார். இதில் வில்லன் நடிகர் என்ற அவரது சினிமா இமேஜ் காற்றில் பறந்துவிட்டது. இவர்தான் நிஜ ஹீரோ என்று எழுத்தாத பத்திரிகைகள், சொல்லாத மீடியாக்கள் இல்லை. சினிமா மாயை இல்லாமல் தனது நற்பணிகள் மூலம் மக்கள் செல்வாக்கை பெற்ற சோனு சூட் அரசியலில் சேர பல கட்சிகள் அழைப்பு விடுக்கின்றன.
இதுபற்றி அவர் கூறும்போது, ’ என்னை அரசியலில் சேர கேட்டு பல வருடங்களா கவே அழைப்புகள் வருகின்றன. நடிகனாக இருப்பதால் அரசியலுக்கு வர சிந்திக்கவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு படகில் சவாரி செய்ய விருப்பம் இல்லை. ஒருவேளை அரசியலிலுக்கு வந்தால் 100 சதவீதம் உழைப்பை கொடுப்பேன். எல்லோரும் பிரச்சினை இல்லாமல் வாழ்கிறார்களா என்பதை அனுபவ பூர்வமாக கேட்டு அதனை உறுதி செய்வேன்.
இவ்வாறு சோனு சூட் கூறினார்.