சென்னை:
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில், கணவர் கைது செய்யப்பட்டதால் மனம் உடைந்த மனையியும், 2 மகள்களும் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்து சமய அறநிலையத்துறையில் வேலை செய்து வருபவர் தேவராஜன். இவரது சொந்த ஊர் கடலூர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சென்னை எம்.ஜி.ஆர். நகர் அழகிரி தெருவுக்கு குடிவந்தனர். அவர்களின் உறவினர் திருநாவுக்கரசு என்பவரது வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார்.
family
தேவராஜன்மீது வேலை வாங்கி தருவது தொடர்பாக கடலூர் காவல் நிலையத்தில் மோசடி வழக்கு உள்ளது. இது தொடர்பாக கடநத் 3-ந்தேதி போலீசார் தேவராஜனை கைது செய்து கடலூருக்கு கொண்டு சென்றனர்.
இன்று காலை வெகுநேரமாகியும் மாடியில் இருந்து யாரும் கீழே இறங்கி வராததால், வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் உறவினர் மாடிக்கு சென்று பார்த்தார். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததால், கதவை தட்டி கூப்பிட்டு பார்த்தார். எந்தவொரு பதிலும் வராததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தேவராஜனின் மனைவி, மகள்கள் 2 பேர் ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
devarajan
தேவராஜனை போலீஸ் பிடித்து சென்றதால் அவரது மனைவி, மகள்கள் மிகவும் வேதனையில் இருந்தனர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் குடும்பத்துடன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.