ஈரோடு:  ஈரோடு அருகே ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக, கணவரை  காரில் வைத்து உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்ந்து, இறந்த நபரின் மனைவி மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர்  ரங்கராஜ் (வயது 62). இவர் விபத்து காரணமாக,கோவை தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை, அவரது மனைவி ஜோதிமணி, உறவினரான ராஜா (41) ஆகியோர் மருத்துவமனையில் இருந்து ஆம்னி வண்டியில் ஏற்றிக்கொண்டு பெருந்துறைக்கு  அழைத்து வந்துள்ளனர்.

வரும்போது,  பெருந்துறையை அடுத்த பெருமாநல்லூர் பொரசுபாளையம் பிரிவு அருகே,  காரை நிறுத்தி, உள்ளே இருந்த  ரங்கராஜ் மீது பெட்ரோலை ஊற்றி  உயிரோடு எரித்து உள்ளனர். கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக ஒப்பாரி வைத்துள்ளனர்.

இந்த மரணம் குறித்து சந்தேகம் அடைந்த  ரங்கராஜின் மகன் நந்தகுமார்  காவல்துறையில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், இறந்த  ரங்கராஜனின்  மனைவி ஜோதிமணி, அவரது உறவினர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், ரங்கராஜனுக்கு லட்சக் கணக்கில் கடன் இருப்பதாகவும், இவர் விபத்தில் இறந்தால், அவர் செலுத்தியுள்ள காப்பீட்டுத் தொகை ரூ. 3 கோடி கிடைக்கும், அதைக் கொண்டு கடலை அடைத்துவிட்டு நிம்மதியாக வாழாலாம்  என நினைத்து,    ரங்கராஜனை பெட்டோரல் ஊற்றி எரித்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணி, உறவினர் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.