சென்னை
சென்னை நகரின் பல இடங்களில்  நள்ளிரவு முதல் காலை 8 மணி மழை பெய்தது. இதனால் சாலைகளின் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக சென்னை மக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டளில் மழை பெய்யும் என்றும் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நள்ளிரவு முதல் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது. அடையாறு, திருவான்மியூர், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி , கோயம்பேடு, பெரம்பூர், மாதவம், மணலி மற்றும் செங்குன்றம் உள்பட பல பகுதிகளில் கனமான மழை முதல் மிதமான மழை வரை பெய்தது.
மழை காரணமாக வெயின் வெப்பம் சற்றே குறைந்துள்ளது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

[youtube-feed feed=1]