சென்னை: தமிழ்நாட்டில் மாநில தலைநகர் சென்னை உள்பட 20 மாவட்டங்களில் இன்று பகலில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி இன்று காலை சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில்  இன்று பகலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அமிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று,, சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் ராமநாதபுரம் பெரம்பலூர் அரியலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி கோயம்புத்தூர் நீலகிரி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலையிலேயே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், காலை 8மணி அளவில் திடீரென வெயில் கொளுத்த தொடங்கியது. ஆனால், அடுத்த ஒரு மணி நேரம் மீண்டும் திடீரென வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சென்னையின் பல பகுதிகளில் திடீரென மழை பெய்தது.