சென்னை: எனக்கு தலைவர் பதவி தராதது ஏன்? என பாஜக தலைமைக்கு கேள்வி எழுப்பி உள்ள முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், தான் வருத்தத்துடன் பாஜகவில் உள்ளதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கொந்தளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக பதவி வகித்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 6 மாதங்களுக்க மேலாக மாநிலத் தலைவர் நியமிக்கப் படாமல் தமிழக பாஜக தத்தளித்து வந்தது. பின்னல் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு எல்.முருகன் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, பல்வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன. அதன்படி, திமுகவில் இருந்து பிரிந்து சென்ற வி.பி.துரைசாமி, நடிகர் ராதாரவி உள்பட மதுவந்தி, கவுதமி, விஜயகுமார், குட்டி பத்மினி, நமீதா, கஸ்தூரி ராஜா, பெப்சி சிவா, பேரரசு என பலருக்கு பதவிகள் வாரி வழங்கப்பட்டன.
ஆனால், மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்து சில ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சரான நயினாரே நாகேந்திரன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. நெல்லை மாவட்டத்தில் பிரபலமானவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் பல ஆண்டுகளாக துணைத்தலைவர் பதவியிலேயே நீட்டிக்கப்பட்டு வந்தது அவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து.
இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ள நயினார் நாகேந்திரன் எனக்கு தலைவர் பதவி தராதது ஏன்? என்று அதிரடியாக பாஜக தலைமைக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறியதாவது,
தீவிர சசிகலா விசுவாசியான நயினார், கடந்த 2001-ம் ஆண்டு திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவில் போட்டியிட்ட அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, போக்குவரத்து துறை, மின்துறை, தொழில்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால், கடந்த 2006 தோல்வி அடைந்த நிலையில், 2011-ல் மிகப்பெரிய வெற்றி, பெற்றார். அதே வேளையில் 2016 தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், ஜெ.மறைவுக்கு பிறகு, சசிகலாவுக்கம் ஜெயிலுக்கு சென்றதால், அவரது ஆதரவாளரான நயினாரும் ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து, 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
பின்னர் 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து பாஜக மாநில தலைவர் பதவிக்கு அச்சாரம் போட்டார். ஆனால், அவருக்கு ஆதரவு இல்லாத நிலையில், எதிர்பாராத வகையில் முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனால் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிய நயினார் திமுகவுக்கு தாவலாம் என்றும் தகவல்கள் பரவத்தொடங்கின. இதையடுத்து, நெல்லை வந்த மாநில தலைவர் முருகன் அவரை சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஊடகத்துக்கு பேட்டி அளித்த நயினார், தனது மனநிலையை ஓப்பனாக தெரிவித்து உள்ளார்.
எனக்கு தலைவர் பதவி தராதது ஏன்? என்று கேள்வி எழுப்பியவர், பாஜக மீது தான் மன வருத்தத்தில் இருக்கிறேன் என்று கூறியவர், தமிழிசைக்கு பிறகு, தனக்கு மாநில தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும் ஆனால், தனக்கு பதவி வழங்கவில்லை என்று கூறியவர், தற்போது பாஜகவில் இருந்து விலகும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
நயினார் நாகேந்திரனின் அதிரடி பேட்டி, பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.