மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்  தொடர்பான  நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவில் இன்றே தீர்ப்பு  வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்து உள்ளது.

ஒரு தரப்பினர் தங்கள் மதச் செயல்பாட்டைச் செய்வதைத் தடுப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை அடைய முடியாது. சகவாழ்வால் மட்டுமே அதை அடைய முடியும். வருடத்திற்கு ஒரு முறை, யாரையும் பாதிக்காமல் விளக்கேற்றினால், அவர்களை அனுமதிப்பதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?  என  விசாரணையின்போது நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனு இன்று (டிச.4) நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின்போது,  தீபத்தூண் கோவிலை விட பழமையாதா? மாலை 5மணிக்கு விசாரணையின்போது, அறநிலையத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லையே ஏன்?, திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர்.
  • உத்தரவு நகல் பதிவேற்றி 12 மணி நேரத்திற்கு பிறகுதான், மேல்மறையீடு குறித்து முடிவு எடுக்க தாமதம் ஏன் என கேள்வி எழுப்பியது.
  • இந்த விவகாரத்தில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய நிலையில், 30 நாள் அவகாசம் எப்படி  சரியாகும் என கேள்வி எழுப்பினர்.
  • மாலை 5மணிக்கு விசாரணையின்போது, அறநிலையத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லையே ஏன்?
  • இந்து அறநிலையத்துறை நீதிமன்ற உத்தரவை ஏன் மதிக்கவில்லை  என்றும் கேள்வி எழுப்பினர்.

உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன்,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அரசுக்கு உத்தரவிட்ட நிலையில்,அதை மதிக்காமல், 144 தடை விதித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், மலை உச்சியில் தீபம் ஏற்ற முடியாத நிலை உருவானது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணையை தொடங்கியது. வழக்கின் விசாரணையின்போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள், தனி நீதிமன்ற உத்தரவை கடுமையாக சாடினர். அங்கு பதற்றம் உள்ளதாகவும், அதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும் குற்றம் சாட்டினர்.

மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன் என குற்றம் சாட்டியதுடன்,   மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த சம்பவத்தின்போது,  பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது என்று கூறியதுடன்,

சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி,  உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே, அதைத்தாண்டி அல்ல என்றும், அவர்களை அனுமதித்தது தவறு என்றும் கூறினர்.‘ ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

பிரிட்டிஷ கால பழக்கத்தை தமிழர்கள் ஏன் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்து அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூனில் தீபம் ஏற்றுவது தமிழர்களின் மரபு, பழக்கம், பண்பாடு, கலாச்சாரம் என்று விவரித்த மனுதார்கள், இடையில் அவை தடுக்கப்பட்டாலும், மீண்டும் அது தொடரப்பட வேண்டும் என்று வலியுறுதினர்.

விசாரணையின்போது, நீதிபதிகள், தமிழ்நாடு அரசு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தீபத்தூண் கோவிலை விட பழமையாதா? என கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மாலை 5மணி நடைபெற்றது. இதில் ஆஜராக அறநிலையத் எதுறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும், அவர்கள்  விசாரணையின்போது,  ஆஜராகவில்லையே ஏன்? , நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை என்றும் கூறியதுடன், காவல்துறை ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை என்றும்  நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர்.

மேலும், மலை உச்சிமலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் ஏன் உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தாக்கல் செய்தீர்கள்?  என கேள்வி எழுப்பினர்.

இதற்கு மனுதாரர் தரப்பில், “தனி நீதிபதி உரிய விசாரணை நடத்தி தான் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். ஆனால், கோயில் நிர்வாகம், காவல்துறை நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், திடீரென 144 தடை உத்தரவைப் பிறப்பித்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டது.

, நீதிமன்ற உத்தரவின்படி,மலை உச்சியில் தீபம் ஏற்ற எந்தவொரு நடவடிக்கையை அரசு எடுக்க முன்வராத நிலையிலேயே, அவசர மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது என்றும், அதுதொடர்பாக அதிகாரிகளை சந்தித்து கேட்டும், எந்தவொரு பதிலும் தெரிவிக்கவில்லை,

அதற்கு பதிலாக கோவிலை சுற்றி காவல்துறையினர்  போடப்பட்டு, மக்களிடையே பதற்றத்தை உருவாக்க முனைந்தனர்,  பக்தர்கள்  கோவிலுக்கு வருகை  தடுத்து வந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து காரசார விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில்,  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மனுதாரருக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்?. சிஐஎஸ்எஃப் வீரர்களின் அதிகாரம் என்ன?. ஒருவேளை காவல்துறை பாதுகாப்பு தர அனுமதி மறுத்ததால் சிஐஎஸ்எஃப் உதவி நாடப்பட்டதா?” என்று வினவினர்.

தொடர்ந்து நீதிபதிகள், “மத நல்லிணக்கம் என்பது அனைவருக்குமானது. ஒருவரை எதுவும் செய்யவிடாமல் தடுப்பது மத நல்லிணக்கத்தை பேணுவது ஆகாது. சகவாழ்வால் மட்டுமே அதை அடைய முடியும். வருடத்திற்கு ஒரு முறை, யாரையும் பாதிக்காமல் விளக்கேற்றினால், அவர்களை அனுமதிப்பதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?  என  விசாரணையின்போது நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

மேலும், அவரவருக்கு உரிய மத உரிமையை அனுபவிக்க விட வேண்டும். இருதரப்பும் இணைந்து தங்களுக்கு உரிமையானதை செய்து கொள்ள வேண்டும்.” என்று கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.