சென்னை: சட்டப்பேரவையில் இன்று தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவருக்கும், முதலமைச்சருக்கும் இடையே கார விவாதங்கள் நடைபெற்ற நிலையில், அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி, வெளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து செய்தியளார்களிடம் கூறினார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது,. கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் அதிகரித்து, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றம் சாட்டினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறியதுடன், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்றதை கூறி பேசினார். இதனால் எடப்பாடி தொடர்ந்து பேச முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சட்டம், ஒழுங்கு குறித்த முதல்வரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

இதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில்,  பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என் கூறியதுடன்,  பெண் காவலருக்கே பாதுகாப்பு அளிக்காத திமுக அரசு மற்ற பெண்களுககு எப்படி பாதுகாப்பு அளிக்கும்? என கூறினார். மேலும் தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது, தினசரி நாளிதழ்களில் வந்த செய்திகளைத்தான் அரசுக்கு பேரவையில் சுட்டிக்காட்டினோம் என்றார்.