சென்னை: கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச அனுமதி மறுக்கவில்லை, ஆனால், அவர்கள் மாண்பை குலைக்கும் வகையில், விதிகளை மீறி நடந்துகொண்டதால், அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என அதிமுக உள்பட எதிர்க்கட்சியினர் தர்ணா செய்த நிலையில், அவர்களை அவைக்காவலர்களை கொண்டு, சபாநாயகர் அப்பாவு வெளியேற்றினார்.
இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,கேள்கி கேட்பவர்களை வெளியேற்றுவது எந்த வகையில் நியாயம் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து பேரவையில் சபாநாயகர் விளக்கம் அளித்தார். அப்போது, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள கவன ஈர்ப்பு தீர்மானத்தை பற்றி பேச அனுமதி மறுக்கவில்லை என்றவர், பேரவையின் மாண்பை குலைக்கும் வகையில்நடந்துகொண்டதால் வெளியேற்றப்பட்டனர். பேரவையில் அமளியில் ஈடுபட்டோர் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றதுடன், அவர்கள் விதிகளை மீறி நடந்துகொண்டதால், இன்று ஒருநாள் மட்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்று கூறினார்.
இதுகுறித்து பேரவையில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன் , பேரவையின் கேள்வி நேரம் முடிந்த பிறகே, கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க முடியும். பேரவை விதிகளுக்கு உட்பட்டுதான் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். வுதிகளை தெரிந்தும் எதிர்க்கட்சகிள் இதுபோனற் செயல்களில் ஈடுபடுகின்றனர். தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே அதிமுகவை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது என்றார்.