சென்னை:
கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
திமுக சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருவதாக குற்றம் சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார் கொல்கத்தாவில் பிரதமர் வேட்பாளராக ராகுலை, ஸ்டாலின் ஏன் முன்மொழியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், சைதைப்பேட்டையில், மீன்வளம் தொடர்பான 15,000 நூல்கள் கொண்ட நூலகம் திறக்கப்பட்டுள்ளது என்று வறினார்.
மேலும், சென்னையில் மீன்களை பதப்படுத்தி வைக்கும் பெட்டியுடன் கூடிய இருசக்கர வானகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றுவது என்பது நல்ல விஷயம் தான் என கூறியுள்ளார்.
தலைமைச் செயலக அலுவலகத்தில் கற்பூரம் கொளுத்துவது யாகம் வளர்ப்பதாகுமா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து செய்தி யாளர்கள், ஈபிஎஸ் இல்லாத நேரத்தில், ஒபிஎஸ் யாகம் வளர்த்ததாக கூறப்படுகிறே.. இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “யாகம் வளர்ப்பதால் ஒருவர் முதல்வராக முடியுமா? என எதிர்கேள்வி எழுப்பினார். யாகம் வளார்ப்பதாலேயே ஒருவர் முதல்வராக முடியாது என்றவர்… இதுகுறித்து ஸ்டாலின் சொல்வதை சிறுபிள்ளைத்தனமாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
கோட்டையில் உள்ள ஓபிஎஸ் அலுவலகம் செப்பனிடப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்தே அங்கு ஊதுபத்தி, கற்பூரம் கொளுத்தப்பட்டது…. அதற்ககாக யாகம் வளர்ப்பததாக கூறுவதா? என கடிந்தார்.
அதைத்தொடர்ந்து கொடநாடு எஸ்டேட் குற்றவாளிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், கொடநாடு குற்றவாளிகளுக்கு பின்னணியில் திமுக இருப்பதாக குற்றம் சாட்டியவர், கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எவ்வளவோ சித்து விளையாட்டுகள் நடைபெற்றன. ஸ்டாலினும் எவ்வளவோ குற்றச்சாட்டுகளை அடுக்கினார், எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கோரினார். இப்போது அலுவலகத்தில் கற்பூரம் கொளுத்தியதற்கும் சிபிஐ விசாரணை கேட்பார்” என அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் சந்தர்ப்பவாதம் முழுமை யாகப் பொருந்தும் என்றவர், கடந்த கால வரலாற்றை தமிழ்நாட்டு மக்கள் உற்று நோக்கினால், 17 ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்துகொண்டு இரட்டை வேடம் கொண்டிருந்த தால், தமிழ்நாடு எந்த வளர்ச்சியையும் அடையவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மழை பெய்தால் சாயம் வெளுப்பது போல அவர்களின் இரட்டை வேடமும் வெளுத்துவிடும் என்றவர், சென்னையில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துவிட்டு மேற்கு வங்கக் கூட்டத்தில் ஏன் ஸ்டாலின் அமைதியானார். தைரியம் இருந்தால் அங்கும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய வேண்டியது தானே? தற்போது, தேர்தலுக்குப் பின்பு அதுகுறித்துப் பேசலாம் என்கிறார்… அதுதான் அவரின் இரட்டை வேடம்.
சந்தர்ப்பவாதிகளும், சந்தர்ப்பவாதமும் மக்களால் அடையாளம் காணப்பட்டு அரசியலில் இருந்து ஒதுக்கப்படும் நிலைமை ஏற்படும். சந்தர்ப்பவாதம் வெற்றி அடைந்ததாக வரலாறு இல்லை” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.