சென்னை,
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலால் தனது டில்லி பயணத்தை செய்தார் மு.க.ஸ்டாலின்.
தமிழக அரசியல் நிலவரம் மற்றும் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவது, கேரள அரசு தடுப்பணை கட்டு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்காக டில்லியில், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் டில்லி செல்வதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு டில்லி செல்வதாக இருந்த தனது பணத்தை திடீரென ரத்து செய்தார் ஸ்டாலின்.
தமிழக அரசியல் சூழல் காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கே.பி. முனுசாமி, பி.ஹெச். பாண்டியன் போன்றவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாமீது கடுமையான புகார்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் சசிகலாவுக்கு எதிராக கடும் புகார்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம், கூட்டப்பட்டிருக்கிறது ஆகவே, தமிழக அரசியல் சூழலின் முக்கியத்துவம் கருதி தனது பயணத்தை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார்” என்று தி.மு.க .தரப்பில் கூறப்படுகிறது.
அதே நேரம், “ஸ்டாலின் சந்திக்க அனுமதி கேட்ட தலைர்களின் அப்பாயிண்மெண்ட் கிடைக்க வில்லை. அதனால் பயணத்தை தள்ளிவைத்துவிட்டார்” என்று டிலலியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.”