ராமண்ணா வீயூவ்ஸ்:
download
ன்று, ( மே 31) புகையிலை எதிர்ப்பு நாளாம்.  சிகரெட்டை விட்டுத்தொலைப்பது பற்றி ஒரு முறை ஆர்.சி.சம்பத் சாரிடம் பேசிக்கொண்டிருந்த போது  அவர் சொன்னார்:
“சிகரெட் பழக்கத்தை நிறுத்துவது ரொம்ப ஈஸி…. ”
“அப்படியா.. எப்படி, எப்படி..?”
சம்பத் சார் அமைதியாகச் சொன்னார்: ” நான் எத்தனையோ முறை நிறுத்தியிருக்கிறேனே!”
அது சரி…!

ஒரு புள்ளிவரம் தெரியுமா…   விபத்து, பேரிடர், மற்ற நோய்கள்.. ஆகியவற்றால் இறப்பவர்களைவிட புகையிலை பழக்கத்தால் இறப்பவர்கள் எண்ணிக்கை. அதிமாம்!
அதனால்தான் இந்தப் பழக்கம் கூடாது என்று சினிமாவுக்கு முன் நியூஸ் ரீலில் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறார்கள். சிகரெட் விளம்பத்துக்கு தடை செய்திருக்கிறார்கள். சினிமாவிலோ, டிவியிலோ புகைக்கும் காட்சி வந்தால், “உடலு்குக் கேடு” என வார்த்தைகளை போடச் சொல்கிறார்கள்.
இவ்வளவு மெனக்கெடுவதற்கு… இருக்கும் நாலைந்து சிகரெட் தொழிற்சாலைகளை மூடுவது எளிதானதுதானே…
“சிகரெட் உற்பத்தியை நிறுத்தினால் “கள்ள சிகரெட்” பெருகிவிடும்” என்று பதில் வந்தாலும் வரும்.

நம்மைப் பொறுத்தவரை புகையிலையில் இருந்து விலகி நிற்பது அவசியம்.
ramana
சிகரெட்டை நிறுத்துவதால் ஏற்படும் பலன்களை அறிந்துகொள்ளுங்கள்:

சிகரெட் புகைப்பதை விட்ட 20 நிமிடங்களில்

# ரத்த அழுத்தம் இயல்பாகும்.

# இதயத் துடிப்பு இயல்பாகும்.

8 மணி நேரத்தில்

# ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கார்பன் மோனாக்சைடு உடலிலிருந்து வெளியேறும்.

# ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்புக்குத் திரும்பும்; அதனால் உடல் சக்தி முன்பைவிட மேம்பட்டிருக்கும்.

2 நாட்களில்

# நரம்புமுனைகள் திரும்ப வளர ஆரம்பிக்கும். நாக்கின் சுவை மொட்டுகளும் மணங்களை உணரும் தன்மையும் அதிகரிக்கும்; அதனால் உணவின் சுவை முன்பைவிட மேம்பட்டிருக்கும்.

2-12 வார இடைவெளியில்

# உடலில் மேல் தோல் மேம்படும்.

# ரத்தவோட்டம் மேம்படும்.

# சுவாசமும் நுரையீரல் செயல்பாடும் மேம்படும்.

# நடை எளிதாகும்.

1-9 மாத இடைவெளியில்

# இருமல், சைனஸ் இறுக்கம் தளரும்.

# மூச்சிளைப்பு குறையும்.

# உடல் சக்தி குறிப்பிடத்தக்க அளவு மேம்படும்.

# நுரையீரலின் சுயசுத்தம் செய்துகொள்ளும் தன்மை மேம்படும். நோய்த்தொற்று ஏற்படும் தன்மை குறையும்.

1 ஆண்டில்

# புகைபிடிக்கும்போது இதயக் கோளாறு ஏற்படுவதற்கு இருந்த ஆபத்து 50 சதவீதமாகக் குறையும்.

5 ஆண்டுகளில்

# பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியம் புகை பிடிக்காதவருக்கு உள்ள அளவுக்கே மாறிவிடும்.

# வாய், தொண்டை, உணவுக் குழாயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் புகைபிடிப்பவரைவிட பாதியாகக் குறையும்.

10 ஆண்டுகளில்

# புகை பிடிக்காதவருக்கு உள்ள சராசரி ஆயுட்காலம் மீண்டும் கிடைக்கும்.

# நுரையீரல் புற்றுநோயால் இறப்பதற்கு உள்ள சாத்தியம் 50 சதவீதம் குறையும்.

# வாய், தொண்டை, உணவுக்குழாய், சிறுநீரகப்பை, சிறுநீரகம், கணையப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் குறையும்

# புற்றுநோயாக மாற வாய்ப்புள்ள செல்கள், இயல்பு செல்களாகப் பதிலிடப்படும்

15 ஆண்டுகளில்

# இதயக் கோளாறு ஏற்படுவதற்கான ஆபத்து, புகை பிடிக்காதவருக்கு இருப்பதைப் போலவே ஆகிவிடும்.

யோசித்துப் பாருங்கள்.. தேவையா இந்த சிகரெட்?

 
.