சென்னை: பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 கிடையாது என்பதற்கான காரணத்தை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கி உள்ளார். எப்போதும் போல மத்தியஅரசு நிதி தரவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில், ரூ.1000 வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், 2025ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்காததற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் , பொங்கல் செலவிற்பான பணத்துடன்,  பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்கப்படுவது வழக்கம். அதன்படி,   வேஷ்டி சேலையுடன் கடந்த சில வருடங்களாக ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் கிடைக்குமென்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 3 ஆண்டுகளும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு இலவச வேட்டி சேட்டையுடன் வழங்கப்பட்டு வந்தது.  அதனால்  இந்த ஆண்டும்,   தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் கிடைக்குமென்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பில், அரிசி, வெல்லம், கரும்பு மட்டுமே அறிவிக்கப்பட்டது.   இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில்,  பொல்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பின்போது, ரொக்கம் அறிவிக்காதது ஏன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து உள்ளார். செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர்,   கடந்த ஆண்டு புயல், மழை போன்ற பேரிடர்களுக்கு அரசு ரூ.2 ஆயிரம் கோடி வரை செலவு செய்துவிட்டது.

பேரிடருக்கான மாநில அரசு நிதியை விடுவிக்கும்படி மத்திய அரசிடம் கோரினோம். ரூ.3 ஆயிரம் கோடி கேட்ட நிலையில், ரூ.275 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியது. பொங்கல் தொகுப்புக்கு தற்போது வரை ரூ.280 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று எப்போருதும்போல மத்திய அரசை குற்றம் சாட்டியதுடன்,

ஜனவரி மாதம் பெண்களுக்கு வழங்கப்படும்,  மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 ஐ பொங்கலுக்கு முன்பு வழங்கிட பரிசீலித்து வருகிறோம் என்றார்.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2025 தைப் பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. இதனால் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்.

அரசுக்கு ரூ.249.76 கோடி செலவை ஏற்படுத்தும். மேலும் பொங்கல் திருவிழாவை ஒட்டி இலவச வேட்டி, சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து வழங்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.