வங்கிக் கடன் மோசடி தொடர்பாக அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

மோசடி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இயக்குனர்களை அழைத்து விசாரணை செய்யும் அதேவேளையில் அந்த வங்கிகளில் ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை விசாரணைக்கு அழைப்பது இல்லை என்று குற்றம்சாட்டினார் சுப்பிரமணியன் சாமி.

மேலும், இந்த நியமன உறுப்பினர்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று தெரிவித்த சு. சாமி இது தொடர்பாக இந்த வழக்கில் சிபிஐ இதுவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று கூறினார்.