சென்னை:

திமுவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்ட நிலையிலும், பிறகு இணைப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த போதும்  ஓ.பன்னீர்செல்வமும்,  மாஃபா பாண்டியராஜனும் ட்விட்டர் பக்கத்தில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் தற்போது இவர்கல், அனிதா தற்கொலை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் ஏன் மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும், நீட் தேர்வு குழப்படிகளால் மருத்துவ படிப்பு சேர முடியாமல் எண்ணற்ற மாணவர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவரான அனிதா இந்த குழப்படிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று  சட்டப்போராட்டம் நடத்தினார். தீர்வு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகம் முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வை எதிர்த்தும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டும் தற்போது தமிழகம் முழுதும் பரவலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஓ.பி.எஸ். – மாஃபா

அரசியல் தலைவர்கள் பலர், அனிதாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நீட் குழப்படிகளுக்கு கண்டனமும் தெரிவித்து வருகிறஆர்கள்.  ஆனால் துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் இந்த விவகாரத்தில் மவுனம் சாதித்து வருகிறார்கள்.

அதிமுகவிலிருந்து வெளியேறி தனி அணியாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இருவரும், சமீபகாலம் வரை பல பிரச்சினைகள் குறித்து ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக கருத்து தெரிவித்து வந்தனர்.

தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்சரூபாய் ரொக்கமும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் அளிப்பதாக  அறிவித்துள்ளார்.

ஆனால்,அணிகள் தனியாக செயல்பட்ட போதும், அணிகள் இணைந்த தருணத்திலும், அதிவேகமாக தங்களது கருத்துக்களை டிவிட்டரில் பகிர்ந்துவந்த ஓபிஎஸ்ஸும், பாண்டியராஜனும் அனிதா விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இருவரையும் கண்டித்து நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.