சென்னை: அமலாக்கத்துறையின் கடிதத்தின்பேரில்,  அமைச்சா் கே.என்.நேரு மீதுஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பணி நியமன முறைகேடு வழக்கில் அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? என ஊழல் தடுப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது..தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் உதவி பொறியாளா், இளநிலைப் பொறியாளா், சுகாதார ஆய்வாளா் என சுமாா் 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. சுமாா் ரூ.634 கோடி வரை லஞ்சம் ஹவாலா பணமாக கைமாறியுள்ளதாக, தமிழக காவல் துறை டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.

நகராட்சி நிர்வாகத்தில் 2,538 நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், வழக்குப்பதிவு செய்யும்படி கடந்த அக்டோபரில் அமலாக்கத்துறை தமிழக டிஜிபி-க்கு கடிதம் எழுதியது. இதன் அடிப்படையில் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அதிமுக எம்.பி இன்பதுரை தாக்கல் செய்த  வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் ஊழல் தடுப்பு காவல் இயக்குநா் உடனடி யாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கடந்த பிப். 20-ஆம் தேதி உத்தரவிட்டது..

ஆனால், இந்த உத்தரவின்படி ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை எனக்கூறி, இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா்..இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், அமைச்சா் கே.என்.நேரு உள்ளிட்டோா் மீது உடனே வழக்குப் பதிய பிப். 20-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தும், அந்த உத்தரவை போலீஸாா் ஒரு மாத காலமாக அமல்படுத்தாமல் உள்ளனா்.

அதற்கு, ஊழல் தடுப்பு சட்டவிதிகளின்படி வழக்குப்பதிவு செய்ய அரசின் அனுமதி தேவை என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பதில் அளித்தார்.

நீதிமன்றம்  வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும், அரசிடம் அனுமதி பெற வேண்டுமா என உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.   மேலும்,  அந்த மனு விரைவில் விசாரணைக்கு வந்துவிடும். மேலும், அமைச்சா் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17 (ஏ)-இன்படி முன் அனுமதி பெற வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய முன் அனுமதி தேவையில்லை என தெரிவித்தனா். தொடர்ந்து., வழக்கு விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ரூ.888 கோடி ஊழல்: அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

[youtube-feed feed=1]