சென்னை: பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை மட்டும் உங்களால் நடத்த முடியாதா? என தமிழக அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின்போது பல ஆண்டுகளாக ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தன. இதனால், ஊராட்சிகளுக்கு உரிய நிதி மத்தியஅரசிடம் இருந்து கிடைக்காமல், ஊரக பகுதிகளில் வளர்ச்சியடையாத நிலை நீடித்தது. 2011 ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சியில் மீண்டும் மக்களால் நேரடி வாக்கு மூலமாகவே மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு தேர்தல் நடத்தப்பட விலலை. இதன் காரணமாக, நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வந்தது. இறுதியாக உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அதிமுக அட்சியில், 2019ம் ஆண்டு நவம்பர் 20 நவம்பர் மறைமுகத் தேர்தல் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவித்jது.
அதையடுத்து. 2019ம் ஆண்டு இறுதியில் இரு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கடந்த ஆண்டு (2020) ஜனவரியில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்த காலக்கட்டத்தில், புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் சிக்கல் எழுந்ததால், அந்த மாவட்டங்களில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் கொரோனாதொற்று பரவல் ஊரடங்கு காரணமாக தேர்தல் நடத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை கடந்த ஜூன் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15க்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தேர்தலை நடத்த மேலும் 7 மாதம் அவகாசம் கோரி தமிழ்நாடு தேர்தல் ஆணையம் செப்டம்பர் 4ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதில் உச்சநீதிமன்றம் தாமதம் செய்தது. இதனால் வேறு வழியின்றி, தமிழ்நாடு அரசு தேர்தல் தேதியை கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழக அரசின் அவகாசம் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல ரோஹத்கி ஆஜரானார்.
தமிழகஅரசின் மனுவை படித்து பார்த்த தலைமை நீதிபதி, உங்களுக்கு ஒருநாள் கூட அவகாசத்தை வழங்க முடியாது என்று கோபமாக கூறினார். நாடு முழுவததும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்த முடிகிறது. தேர்தலுக்கான அரசியல் கூட்டங்களை உங்களால் நடத்த முடிகிறது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை மட்டும் உங்களால் நடத்த முடியாதா? என்று கொந்தளித்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அமல்படுத்துவதில் நீங்கள் தயக்கம் காட்டுகிறீர்கள் என்று கூறினார்.
இதையடுத்து ஆஜரான மூத்த வழக்கறிஞர் முக்கூல் ரோஹத்கி, 7 மாதங்கள் அவகாசம் கொடுக்காவிட்டாலும், 3 முதல் 4 மாதங்கள் அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, எதற்காக மேலும் கால அவகாசம் கேட்கிறீர்கள் என்பது தொடர்பாக பிராமண பாத்திரத்தை, 2 நாட்களில் மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.