சென்னை:

மிழகத்தில் மலேசிய மணல் விற்பனையை வெளிப்படையாக  அரசு மேற்கொள்ளாதது ஏன்? என்று மணல் லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி விடுத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம்  புதுக்கோட்டையைச் சேர்ந்த  நிறுவனம் ஒன்று  மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் 55 ஆயிரம் மெட்ரிக் டன் மணலை தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்தது. அதை லாரிகள் மூலம் வெளியே கொண்டு செல்ல முயன்றபோது உரிய அனுமதிச் சீட்டு இல்லாததால் தடை விதிக்கப்பட்டது.

அதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து  மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறது.

ஒரு யூனிட் அளவு (ஏறத்தாழ 4.5 மெட்ரிக் டன்) மணலின் விலை ரூ.9 ஆயிரத்து 990 என அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மணலுக்கு  பொதுமக்களிடையே வரவேற்பு இல்லை என்றும், இதில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ், தமிழக அரசு மலேசிய மணலை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட டன்னுக்கு ரூ.1,000 அதிகம் வீரப்பனை செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

மேலும்,  மலேசிய மணல் விற்பனையை அரசு மேற்கொள்ளாதது ஏன்?  என கேள் விடுத்தவர், மணல் விற்பனையை வெளிப்படையாக அரசு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.