மதுரை: மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூர்ணசுந்தரி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார். இது அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.
தான் ஐஏஎஸ் கேட்டிருந்த நிலையில், எனக்கு ஐஆர்எஸ் ஒதுக்கப்பட்டு உள்ளது, என்னைவிட குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கெல்லாம் ஐ.ஏ.எஸ் கொடுக்கப்பட்டுள்ளது’ எப்படி என்று கேள்வி எழுப்பி உள்ளார். பூர்ணசுந்தரியின் குற்றச்சாட்டு, மத்திய பணியாளர் தேர்வாணையத்திலும் முறைகேடு நடைபெறுவதை அம்பலப்படுத்தி உள்ளது.
மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் – ஆவுடைதேவி தம்பதியினர். இவரது மகள் எம்.பூரணசுந்தரி. 25வயதான இவருக்கு நரம்பில் பிரச்னை காரணமாக சிறுவயதிலேயே பார்வை கோளாறு ஏற்பட்டது. இருந்தாலும், படிப்பில் சுட்டியான பூரணைசுந்தரி, கலெக்டர் ஆக வேண்டும் என ஆர்வத்தில், மற்ற மாணவிகளைப்போல பள்ளிக்கு சென்று படித்து வந்தார், 10, 12ம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்களை பெற்றவர், மதுரை பாத்திமா கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் எடுத்துப் படித்து தேர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட வங்கித்தேர்விலும் கலந்துகொண்டு தேர்ச்சி அடைந்தார். அதன் காரணமாக அவருக்கு ஊரக வளர்ச்சி வங்கியில் பணி கிடைத்தது. அங்கு பணியாற்றிக்கொண்டே ஐஏஎஸ் தேர்வை எழுதுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். முதல் மூன்றுமுறை ஐஏஎஸ் தேர்வில் தோல்வி அடைந்தும் விடா முயற்சியாகமீண்டும் மீண்டும் எழுதி 4வது முறையாக கடந்த 2019ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வை எழுதினார். இதில் அவர் வெற்றி பெற்றது கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி வெளியான தேர்வு முடிவில் தெரிய வந்தது. இதில், பூர்ணசுந்தரிகிகு அகில இந்திய அளவில் 286-வது இடம் கிடைத்து.
இதையடுத்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் மாதம் 21ந்தேதி பணி ஒதுக்கிடு பட்டியல் வெளியிட்டது. அந்த பட்டியலில், பூர்ணசுந்தரிக்கு ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய்ப் பணி) பணியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பூர்ணசுந்தரி, தான் ஐஏஎஸ் விரும்பிய நிலையில், தனக்கு ஐஆர்எஸ் ஒதுக்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பினார். மத்திய பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டே தமிழகத்தை சேர்ந்தவர்களை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், ` ஓ.பி.சி இடஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி எனக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் எனக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஐ.ஆர்.எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. ஓ.பி.சி பிரிவில் என்னைவிடக் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது’, எனவே எனக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்த மனு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளையின் தலைவர் எஸ்.என்.டீர்டல், நிர்வாக உறுப்பினர் சி.வி.சங்கர் ஆகியோர் விசாரித்தனர். பூர்ணசுந்தரி தரப்பில் வழக்கறிஞர்கள் கண்ணன், பாஸ்கர் மதுரம் ஆகியோர் வாதிட்டனர். முடிவில் தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவில், `2019-ம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து செப்டம்பர் 21 அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது’ எனத் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 22-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.