\பெங்களூரு:
பெங்களூரு பல்கலைக்கழகம் அளிக்க முன்வந்த கவுரவ டாக்டர் பட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 52வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் ராகுல் டிராவிட் உள்பட மூவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக அப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
ஆனால் கவுரவ டாக்டர் பட்டம் பெற தனக்கு விருப்பமில்லை என்று பல்கலைக்கழக துணைவேந்தரிடம் ராகுல் டிராவிட் கூறிவிட்டார்.
“விளையாட்டுத்துறையில் ஆராய்ச்சி செய்து அதன் மூலம் டாக்டர் பட்டம் பெறவே நான் விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.