திண்டுக்கல்: ஜெ., மரணம் குறித்து நீதி விசாரணைக்கு எடப்பாடி அரசு மறுப்பது ஏன் என்று முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுள்ளார்.

எடப்பாடி – ஓ.பி.எஸ்.

திண்டுக்கல்லில் அ.திமு.க புரட்சி தலைவி அம்மா அணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “சமாதானம் பேசலாம் என்று வந்தார்கள். ஆனால் நாங்கள் விதித்த நிபந்தனையான, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கவேண்டும் என்பதை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. இதுவரை சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்கவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சார்பில் தேர்தலில் யார் நின்றாலும் டெபாசிட் இழப்பார்கள். எங்கள் அணி ஜனநாயக இயக்கமாக வளர்ந்து புதிய சகாப்தம் படைக்கும்” என்று பன்னீர் செல்வம் பேசினார்.

மேலும் அவர், “ ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு எடப்பாடி அரசு மறுப்பது ஏன்?” என்றும்  கேள்வி எழுப்பினார்.
முன்னதாக  முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன் (நிலக்கோட்டை தொகுதி), பழனிச்சாமி (வேடசந்தூர் தொகுதி) ஆகியோர் ஆதரவு தெரிவித்து, பன்னீர் செல்வம் அணியில் இணைந்தனர்.