ஸ்பெஷல் வகுப்புக்கு வராமல் போராட்டத்துக்கு ஏன் சென்றாய்? மாணவி தற்கொலை முயற்சி

Must read

அருப்புக்கோட்டை,

ஸ்பெஷல் வகுப்புக்கு வராமல  ஏன் போராட்டத்துக்கு போனாய் என்று கண்டித்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-வது வகுப்பு படித்து வருபவர் தனம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. அதுபோலல் அருப்புக்கோட்டை பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொள்ள மாணவி தனம் சென்றிருக்கிறாள்.

அதற்கு முன்னதாக தந்தையே மகளை போராட்ட களத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து மூன்றாவது நாள் டியூசன் கிளாசுக்கு போகிறேன் என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டு தனியாகவே சென்றிருக்கிறார் தனம். அவரோடு தோழிகள் சிலரையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

மாணவி தனம் மற்றும் அவரது தோழிகள்  போராட்டத்தில் பங்கு பெற்ற காட்சியை செல்போனில் படம் பிடித்து யாரோ மர்ம நபர் வாட்ஸப்பில் பரப்பியிருக்கிறார்.

இதனால் தனம் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பெற்றோர் தனதை கண்டித்துள்ளனர். மற்ற மாணவிகளின் பெற்றோரும் தனத்தை கண்டித்துள்ளனர்.  இந்நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு  நேற்று பள்ளி சென்றார் தனம்.

அவரிடம்  “ஏன் ஸ்பெஷல் கிளாஸுக்கு வரவில்லை?” என்று பள்ளி தரப்பில் கேட்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக கடும் மன அழுத்தத்திற்க ஆளாகியுள்ளார் தனம். இதனால்  விறுவிறுவென்று பள்ளியின் இரண்டாவது தளத்துக்குச் சென்று, கீழே விழுந்து தற்கொலை செய்ய முயன்றார்.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கெஞ்சியும், அவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துவிட்டார்.

பள்ளி நிர்வாகத்தின்ர் அவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்த விபத்தில் தனத்தின்  முதுகு தண்டுவடத்தில் பலத்த அடி பட்டிருக்கிறது.  கை எலும்பும் முறிந்து விட்டது.

மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article