மயிலாடுதுறை:

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவோடு சீர்காழியில் உள்ள ஓசை நாயகி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

அவரது குரல் வளம் சரியாகவே, ஓசை நாயகி அம்மனை அவர் வழிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள பழமைவாய்ந்த ஓசைநாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு நேற்று , தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினரோடு வந்து  வழிபாடு நடத்தினார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பரிவட்டம் கட்டி அவருக்கு சிறப்பு மரியாதை செய்யப்ப்டடது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டு விஜயகாந்த் ஓசைநாயகி அம்மனை மனமுருக வேண்டினார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு கோவில் சார்பில் தேன் பிரசாரம் கொடுக்கப்பட்டது.

இந்த ஓசை நாயகி அம்மனிடம், ஓசை, அதாவது, குரல் பாதிப்பு உள்ளவர்கள் இக்கோவிலில் மனமுருக பிரார்த்தனை செய்தால், அந்தப் பாதிப்பு நீங்கும் என்று நம்பப்படுகிறது. அங்கு வழங்கப்படும் பிரசாதமான தேன் அருந்தினால், குரல் வளம் நலமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதன் காரணமாகவே,  விஜயகாந்த் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்ததாகவும், அபோத அவருக்கு தேன் பிரசாதம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக குரல் வளம் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், குரல்வளம் வேண்டியே ஓசை நாயகி அம்மனை தரிசனம் செய்தாக கூறப்படுகிறது.