மணிப்பூர்

மணிப்பூர் முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங்  வேட்பாளர் மனுதாக்கல் செய்த போது சமூக ஆர்வலர் இரோம்சர்மிளா விசில் ஊதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

உத்தரபிரதேசம், உத்தராஞ்சல், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் தேர்தல் முடிந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் இரண்டாம் கட்டதேர்தல் முடிந்துள்ளது. மணிப்பூரில் அடுத்தமாதம் 4 மற்றும் 8-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.  இதைமுன்னிட்டு மணிப்பூர்மாநிலத்தில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து வருகின்றனர்.

இரோம்சர்மிளா மக்கள் மறுவாழ்வு மற்றும் நீதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளார். இவர் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதன்மூலம் ஊழலை வெளியேற்றுவோம் என்றும் சின்னத்திற்கு விளக்கம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் இபோபிசிங் நேற்று  மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் இரோம் சர்மிளாவும் அப்போது மனுதாக்கல் செய்தார்.

இபோபிசிங் மனுதாக்கல் செய்துவிட்டு காரில் சென்றபோது இரோம்சர்மிளாவும் அவருடன் வந்திருந்தவர்களும் விசில் ஊதி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இரோமின் இந்தச் செயலுக்கு மணிப்பூர் காங்கிரஸ் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.