மரங்களில் மிக முக்கியமானது, அரசனாகவும் பார்க்கப்படுகின்றது அரச மரம். அரச மரத்தின் தெற்கு பக்க கிளைகளில் ஆலகால விஷத்தைக் குடித்த சிவ பெருமானும், மேற்கில் காக்கும் கடவுள் நாராயணனும், கிழக்கில் தேவர்களும் இருப்பதாகத் ஆன்மிகம் தெரிவிக்கின்றது.
அதுபோல, அறிவியலும், அரச மரத்தினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விவரிக்கறிது. அரசு என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு மரமாகும். அரசு, ஆல், அத்தி போன்றவை இதனோடு தொடர்புடைய மரங்கள் ஆகும்.
இந்த மரம் இருக்குமிடத்தில் அதிகமான ஆக்ஸிஜனை இருக்கும். 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது.
இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இம்மரம் இந்து பௌத்த மதங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. புத்தர் ஞானம் பெற்றதாக குறிப்பிடப்படும் போதி மரம் இதுவேயாகும்
அரச மரத்தைச் சுற்றுவதன் மூலம் னைத்து தெய்வங்களையும் தரிசித்த பலன்கள் மட்டுமின்றி, அதை சுற்றுபவர்களுக்கும்ஏராளமான கிடைக்கும் என்பது உண்மை.
தீரா நோய் தீர, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.
குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு
வைக்கவும்.விரைவில் குணம் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .
குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.
தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.
ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.
அரச மரத்தை காலை 10 மணிக்குள் சுற்றுவதன் மூலம், அதன் மீது விழும் சூரிய கதிர்கள் மூலம் மிகச் சிறப்பான சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் இந்த காற்றில் பெண்களின் கர்ப்பப்பையை வலுப்படுத்தக் கூடிய சக்தி உள்ளடக்கியுள்ளது. அதிக ஆக்ஸிஜனை வெளியிடும் மரங்களில் முக்கியமானதாக இந்த அரச மரம் உள்ளது.
அரச மரத்தைப் பகலில் மட்டும் தான் சுற்று வேண்டும். இரவில் சுற்றக் கூடாது. அரச மரத்தை திங்கள் கிழமை, சனிக்கிழமைகளில் சுற்றி வழிபடுதல் மிகவும் நல்லது.