ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்??
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் – பெண் இருபாலரும் கண்டிப்பாகக் கழுத்தில் ருத்ராட்சம் அணிய வேண்டும். ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி மீண்டும் சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே பிறந்துள்ளோம்
நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், துன்பம், துயரம், துக்கம், வேதனை, வலி கஷ்டம் இவற்றிலிருந்து விடுபடுவதற்காகவே நாம் ருத்ராட்சம் அணிய வேண்டும். ருத்ராட்சம் அணிந்தால் மகா பேரானந்தமே. ருத்ராட்சம் அணிவதைச் சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள்,
அதைப் பொருட்படுத்த கூடாது. இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைக்கும். ருத்ராட்சம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்சம்.
ருத்ராட்சத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்குக் கஷ்டத்தையும், துன்பத்தையும் வேதனையையும் கொடுப்பாரா?. நம்மை நல்வழிப் படுத்துவதற்காக வலியுறுத்துவாரே தவிர நம் வாழ்வைக் கெடுக்க மாட்டார் அதனால் யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல் கண்டிப்பாக ருத்ராட்சத்தை அணியவேண்டும்.
ருத்ராட்சத்தை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய தினந்தோறும் 108 முறை சொல்லி வந்தாலே போதுமானது.