பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய அணி, காயத்தால் தத்தளித்துவரும் நிலையில், பிரிஸ்பேனில் நடைபெறும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இடம்பெறவுள்ளோர் யார்? என்ற உத்தேச தகவல்கள் கசிந்துள்ளன.
தற்போதைய நிலையில், அனுமன் விஹாரி விலகிவிட்டார். பும்ராவும் கிட்டத்தட்ட விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், காயமடைந்திருந்தாலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் பங்கேற்பது உறுதி என்றே தகவல்கள் கூறுகின்றன.
இந்திய அணியின் உத்தேசப் பட்டியல்:
ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், ஷப்மன் கில், ஷர்த்துல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ்.
அதேசமயம், அஸ்வின் காயம் காரணமாக ஆடாமல் போனால், அவருக்கு பதிலாக நடராஜன் அணியில் இணைய வாய்ப்புள்ளது.