சென்னை,
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு 300 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது சிகிச்சை குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சிகிச்சையின் போது ஜெயலலிதாவுடன் அப்பல்லோவிர் இருந்தது யார்? என்பதை அப்பல்லோ நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை கேள்வி விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக தொண்டர்கள் கூறி வந்த நிலையில், தமிழக அரசு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
இதற்கிடையில், ஜெ.சிகிச்சையின்போது, ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், திராட்சை சாப்பிட்டார், உடற்பயிற்சி செய்கிறார் என்று பல்வேறு கருத்துக்களை தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலை வர்கள் மத்திய அமைச்சர்கள், கவர்னர், மருத்துவர்கள், அப்பல்லோ நிர்வாகம் உள்பட அனைவ ரும் பொதுமக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் கூறி வந்த நிலையில் அவர் டிசம்பர் 5ந்தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது மரணத்தில் மர்மம் சூழ்ந்துள்ளது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், தற்போது அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் காரணமாக, ஜெ. சிகிச்சையின் போது நாங்கள் சொன்னது பொய் என்று தமிழக அமைச்சர்கள் சிலரும், சசிகலாவுக்கு பயந்தே பொய் சொன்னோம் ஒன்று ஒரு அமைச்சரும், ஜெயலலிதாவை எல்லோரும் பார்த்தோம் என்று வேறு ஒரு அமைச்சரும், ஜெ.வை யாருமே பார்க்கவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஜெயலலிதா சிகிச்சையின்போது, அவருடன் அப்பல்லோவில் இருந்தது யார் யார் என்ற விவரத்தை அப்பல்லோ நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.