நெட்டிசன்:
ரவிசுந்தரம் (Ravi Sundaram) அவர்களின் முகநூல் பதிவு:
இந்திய அரசின் “செல்லாது” அறிவிப்பை நான் எதிர்ப்பவர்கள் வெட்கப்படவேண்டும் என்று சொன்னார் ஒரு தேசாபிமானி நண்பர்.
அவருக்கு நான் அளித்த பதில்:
“நாங்க ஏன் சார்.வெட்கப்படனும்.?
உலகின் ஒரே ஒரு ஒப்பற்றதலைவரும் அவர சுத்தி இருக்கும் அதி தீவிர சிந்தனையாளர்களும் தான் வெட்கப்பட வேண்டும்.
ATMல் எவ்வளவு சைஸ் ரூபாய் பிடிக்கும் என்று கூட சிந்திக்காத மொக்க சிந்தனையாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
ஒரு தேசத்தின் எல்லா மூலைகளுக்கும் முதலில் புதிய 500 ரூபாய் போகனுமா …புதிய 2000 ரூபாய் போகனுமா என்று திட்டமிட தவறிய அதி மேதாவிகள் வெட்கப்பட வேண்டும்.
வங்கியில் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் புத்தரின் மறு அவதாரம், தேச பகதர்கள் என்று நம்பிய திறமைசாலிகள் வெட்கப்பட வேண்டும்.
File photo of a man counting money after withdrawing it from a State Bank of India ATM in Mumbai
ரிசேர்வ் வங்கியில் உள்ளே வெளியே நடத்தப்படும் ஆட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்று கூட தெரியாமல் அதற்கு ஒரு வழி முறை வகுக்காமல் ஆட்டத்தை தொடங்கினவங்க வெட்கப்பட வேண்டும்.
எல்லாத்துக்கும் மேல ஒரு நாடே தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை வந்த போது ஒரு “Morale support” க்கு உடன் இருந்து உடனுக்குடன் தீர்வு காணாமல் ஜப்பானுக்கு போன பெரியவர் வெட்கப்பட வேண்டும்…
தேச பக்திக்கும் தனிமனித துதிபாடலுக்கும் வித்தியாசம் தெரியாத உங்களை போன்றவர்கள் வெட்கப்படனும்.
முடிந்தால் சிந்தியுங்கள்.