உலகம் முழுவதும் நிலவி வந்த கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
2019 ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய தொற்று நோய் 2020 ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றாக பரவியதை அடுத்து உலகமே முடங்கியது.
கோடிக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் பலநூறு கோடி மக்கள் இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.
2021 ஜனவரி மாதத்தில் வாரத்திற்கு சுமார் 1 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 3500 ஆக குறைந்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு கொரோனா அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு விலக்கியுள்ளது. இருந்தபோதும் கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாக கருதக் கூடாது என்று தெரிவித்துள்ளது.