ஜெனிவா: தடுப்பூசி விநியோகத்தில் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ரஷ்யா உள்பட சில நாடுகளில் கடந்த ஆண்டு (2020) இறுதியிலேயே தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் நடப்பாண்டு ஜனவரியில்தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பல நாடுகள் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகம் செய்து வருகிறது. உலக அளவில் தடுப்பூசி விநியோகம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வருத்தம் தெரிவித்து உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியவர், தற்போதைய நிலைவயில், உலகன் 194 நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பல நாடுகளில் விரைவில் டுப்பூசி செலுத்தும் பணி தொடங்க இருக்கிறது. ஏற்கனவே கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 30 மில்லியன் டோஸ்தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. இதை 100 மில்லியன் டோஸ் ஆக வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால், தடுப்பூசி உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலக்கை எட்ட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தவர்,. கொரோனா தடுப்பூசிகளில் சுமார் 80 சதவிகிதம் பணக்கார நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. பணக்கார நாடுகளில் நான்கு பேரில் ஒருவர் தடுப்பூசியை பெற்றுக்கொள்கிறார், ஆனால், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 500 பேரில் ஒருவருக்கு மட்டுமே தடுப்பூசி கிடைத்துள்ளது. .சில நாடுகள் அரசியல் காரணங்களுக்காகவும், வணிக காரணங் களுக்காகவும் கோவாக்ஸ் திட்டத்தைப் புறக்கணித்துவிட்டு, சொந்த தடுப்பூசியை தயாரித்து விநியோகிக்கத் திட்டமிடுகின்றனர். இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் அதிர்ச்சி அளிக்கின்ற்ன இரு தீங்கை விளைவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.