டில்லி:

ன் தந்தையை கொன்றது யார்? என்று ராஜஸ்தான் மாநிலத்தில்  பசுப் பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட பெலுகான் மகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜஸ்தானில் கடந்த 2017ம் ஆண்டு பசுப் பாதுகாவலர்களால் பெலு கான் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் விடுவித்து அல்வார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெலுகான் மகன், குற்றவாளிகள் யாரும் கொல்லவில்லை என்றால் என் தந்தையை கொன்றது யார்? என்று கேள்வி எழுப்பி  உள்ளார் பெலுகானின் இளைய மகன் இர்ஷாத். தீர்ப்பு வருத்தத்தை அளிக்கிறது. இந்த நாட்டில் வாழ எங்களுக்கு உரிமையில்லாத தால், நாங்கள் சாகத்தான் வேண்டும் என்றே இந்த தருணத்தில் தோன்றுகிறது என்றும் கூறி உள்ளார்/

நாங்கள் கொடுத்த வீடியோ ஆதாரத்தையும் ஏற்க மறுத்து விட்டதாக தெரிவித்தவர் தற்போது நாங்கள் என்ன செய்வது?  விடியோவில் எனது தந்தையை அந்த கும்பல் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது. அது பொய் என்றால், எனது தந்தை எப்படி இறந்தார்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறியவர், போலீஸார் ஒருதலைபட்ச மாக செயல்பட்டுள்ளனர். நிறைய சாட்சிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். ஆனால், இந்த சம்பவம் 3 அல்லது 4 நாட்களுக்கு முன் நடந்தது அல்ல. 2 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம். அப்படி இருக்கையில், குற்றவாளிகளின் முகத்தை அவர்கள் எவ்வாறு நினைவில் கொள்ள முடியும் என்று தெரிவித்தவர், இந்த தீர்ப்பை எதிர்த்து,  நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று கூறினார்.