நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
1)நடிகர் சங்க கட்டிடத்தை ஒரு வருடத்தில் கட்டவில்லை எனில் ராஜினாமா செய்கிறேன் என்றார், சொல்லி 2 வருசம் ஆகுது என்னாச்சு?
2) விவசாயி பிரச்சனைக்கு நிதியமைச்சரை சந்திக்கிறேன் சொன்னாரு எந்த பிரச்சனைக்கு எந்த துறையை அணுகனும்னு கூட தெரியாத அறிவாளி.
3) தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன பிறகு தான் அசோக்குமார் செத்தாரு இப்ப அன்புச்செழி யனை கைது பண்ணனும் பேசுறாரு ஆனா இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் அன்பு அண்ணா இல்லைனா நான் தயாரிப்பாளராகவே ஆகி இருக்க முடியாது என்றார்.
4) சல்லிக்கட்டு பிரச்சனைக்கு பிரதமரை சந்திக்க போறேன்னு பிரஸ் மீட் தலைப்பு செய்தி கொடுத்தாரு பிறகு போனாரா பார்த்தாரா ஒரு தகவலும் இல்லை
5) நிதிமன்ற இறுதிதீர்ப்பு காவிரிநீரை திறக்கனும்னு வருது அந்த நேரத்துல கர்நாடகா போய் காவிரியை தரணும்னு பேசி நீர் திறந்த பிறகு நான் சொல்லியதால் திறந்ததற்கு நன்றி என அறிக்கை விட்டார்.
6) டிக்கெட் காசில் இருந்து விவசாயிக்கு 1.ரூ தரப்படும் என சொன்னார் இதுவரை தரல துப்பறிவாளன் படத்தில் தருவேன் என்றார் அதுலயும் தரல.
7) படத்துக்கு ஒன்றரை கோடி கேபிள் பணம் பெற்றுத் தரப்படும் என்றார் அதுவும் நடக்கல
8) QUBE கட்டணம் 2500 ஆக்கப்படும் என்றார் இப்போது 32000 ஆக ஏறிவிட்டது
9) சுவாதி கொலை வழக்கு படத்தை ரிலீஸ் செய்வேன் என்றார் இப்பவரை படம் வரல
10) மருத்துவ கல்லூரி மாணவர்கள் படிப்புக்கு பணம் தருவேன் என்றார் என்னாச்சு கொடுத்தாரா?
11) தமிழ் ராக்கர்ஸை பிடிப்பேன் எனக் கூறி அதுக்கு படத்துக்கு 1 இலட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது பிடித்துவிட்டாரா?
12) இவர் வந்த பிறகு தான் படத்தலைப்பை பதிவு செய்ய 500ல் இருந்து 2500 ஆக ஆக்கப்பட்டது
13) தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் கட்டணம் 1 இலட்சத்து 25 ஆயிரம் இருந்ததை 3 இலட்ச மாக ஆக்கியுள்ளார்.
14) நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன பிறகு என்ன செஞ்சி கிழிச்சிட்டிங்கனு ஆர்.கே நகர் தேர்தலில் நிற்க போறிங்க???
அறிக்கை, அறிவிப்பு, தலைப்பு செய்தி இதுல நம்ம பெயர் வரனும் அதுக்கு எங்கயாவது மைக் பிடிச்சு என்னத்தையாவது பேசிட வேண்டியது?
1200 பேர் கொண்ட சங்கத்தை காப்பாத்த முடியல இதுல 8 கோடி தமிழனை காப்பாத்த போறாங்களாம் மூடிக்கிட்டு போறிங்களா