டில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் மீண்டும் நீடிக்க விரும்பவில்லை என ரகுராம் ராஜன் அறிவித்துவிட்டதை அடுத்து அடுத்த கவர்னர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பதவிக்காலம் முடியும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன், 2ம் முறையாக  அப்பதவியை வகிக்க விரும்பவில்லை என்று அறிவித்துவிட்டார்.    சிகாகோவில் உள்ள பல்கலையில் பேராசிரியர் பணியில் மீண்டும் அவர் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், “ விரைவில், ரிசர்வ் வங்கிக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படுவார்”  என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இதனையடுத்து, அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
a
இந்த பதவிக்கான பரிசீலனையில் பலரது பெயர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.  ரிசர்வ் வ்ங்கியின் நான்கு துணை கவர்னர்களில் ஒருவராக இருக்கும் உர்ஜித் படேல், .ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, . ரிசர்வ் வங்கியில் புணிபுரிந்த ராகேஷ் மோகன், . ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் சுபிர் கோகர்ன், . தேசிய பங்குச்சந்தையின் தலைவர் அசோக் சாவ்லா, . பொருளாதார நிபுணர் விஜய் கெல்கர்., முன்னாள் பொருளாதார ஆலோசகர் அசோக் லகிரி ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில்  இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களில் ஒருவர் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.