முதல்வன் யார் ?
எண்ணில் ஒருவனோ ?
எம்மில் ஒருவனோ ?
இம்மண்ணில் ஒருவனோ ?
நிச்சயம், எம்மால் ஒருவன் !

முதல்வன் யார் ?
உழைத்து கலைத்தவனோ ?
வியர்வையில் திளைத்தவனோ ?
அறிவினில் சிறந்தவனோ ?
அன்பாய் ஆள்பவனோ ?
வெற்றியில் விளைந்தவனோ ?
அல்ல – அனைத்துமாய் ஆனவனே !

முதல்வன் யார் ?
தாய்மொழி காப்பவனோ ?
தாய் சேய் காப்பவனோ ?
தாய் நிலம் காப்பவனோ ?
தன்மானம் காப்பவனோ ?
அனைத்திற்குமான காப்பரணாய் நிற்பவனே !

முதல்வன் யார் ?
தொழிலாளியின் தோழனோ ?
விவசாய கூலியோ ?
சாமானிய சகோதரனோ ?
கடைக்கோடி தொண்டனோ ?
இல்லை – அனைவரையும் வென்றவனே !

முதல்வன் யார் ?
மதத்தின் குருவோ ?
சாதியின் தலைவனோ ?
சமயத்தின் போதகனோ ?
இனத்தின் வெறியனோ ?
இல்லை – சட்டம் காக்கும் சாமானியன் !

முதல்வன் யார் ?
முதலாளியால் வருவானோ ?
பல்கலைக்கழகங்களால் வருவானோ ?
ஆண்டவனால் வருவானோ ?
மன்றத்தால் வருவானோ ?
இல்லை- மக்கள் வாக்காள் வருவான்!

முதல்வன் யார் ?
எண்ணில் ஒருவனோ ?
எம்மில் ஒருவனோ ?
இம்மண்ணில் ஒருவனோ ?
நிச்சயமாய், எம்மால் ஒருவன் !
எம்மக்கள் வாக்காள் வருவான் !

சிறப்பு கவிதை: கவிஞர், எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்