சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் முதலில் கூறப்பட்ட நபர் குறித்த தகவல் மறைக்கப்பட்ட நிலையில், யார் அந்த சார்?’ என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைவைத்து, அதிமுக ஐடிவிங் தரப்பில், சென்னையின் பிரபலமான எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் நடத்தி போராட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக வளாத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விவகாரம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய குற்றவாளிகள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்த நிலையில், அவருடன் மேலும் ஒருவர் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக குற்றவாளி பேசியபோது, சார் ஒருவருக்காக செயல்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இதை மறுத்து, திடீரென சென்னை மாநகர காவல்ஆணையரின் திடீர் பேட்டி, புகார் தொடர்பான முதல்தகவல் அறிக்கை (FIR) வெளியானது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த குற்ற சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருவதுடன், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் திமுக அரசையும், காவல்துறையினரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில், #யார்_அந்த_SIR என்ற ஹேஸ்டேக்வை ‘ வைலாக்கியதுடன், அதுதொடர்பான போஸ்டர்களை தமிழ்நாடு முழுவதும் ஒட்டி, அதகளப்படுத்தி உள்ளனர். மேலும், பொது இடங்களில் #யார்_அந்த_SIR என்ற வாசகம் எழுதிய பதாதைகளை ஏந்தி நூதன போராட்டத்தை மேற்கொண்டனர்.
சென்னையில், பல இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில், பிரபல மாலான எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளே நடைபெற்ற இந்த போராட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. விடுமுறை தினமான நேற்று அங்கு ஏராளமானோர் வந்த நிலையில், அங்கு நடைபெற்ற போராட்தை கண்ட பொதுமக்களும், இந்த போராட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். பல பெண்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்,.
இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் போராட்டத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”ஒரு சாமானியனைப் பாதிக்கும் பிரச்சினைகளில் அரசியலில் ஒரு போதும் இருக்க முடியாது. இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டதற்கு பாராட்டுங்கள் அதிமுக” என கூறி இருந்தார்.