சிட்னி: துவக்க வீரர் மேத்யூ வேட், கடந்தப் போட்டியைப் போலவே, இந்தப் போட்டியிலும் அதிரடியாக ஆடி வருகிறார். அவர் விரைவாக ஆட்டமிழக்காத பட்சத்தில், ஆஸ்திரேலியா 200 ரன்களைத் தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் ஆரோன் பின்ச் டக்அவுட் ஆன நிலையில், ஸ்டீவ் ஸ்மித்தும் 24 ரன்களுக் கு ஆட்டமிழந்தார். இந்நிலையில், மேத்யூ வேட் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் ஆடி வருகின்றனர்.

மொத்தம் 43 பந்துகளை சந்தித்துள்ள வேட், 2 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகளுடன் 68 ரன்களை விளாசியுள்ளார். மேக்ஸ்வெல் 16 பந்துகளில் 22 ரன்களை அடித்துள்ளார்.

கடந்தப் போட்டியிலும் அதிரடியாக ஆடிவந்த மேத்யூ வேட், கேப்டன் கோலியால் எதிர்பாராத விதமாக ரன் அவுட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.