சென்னை:

மிழகத்தில் விக்கிரவாண்டி நாங்குனேரியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டி  தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கி உள்ளது.

திமுக தலைவர்  திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி, நாங்குனேரி,. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்  அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி உள்ள நிலையில் வரும் 30ஆம் தேதி வரை நடக்கிறது.

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திர சேகரிடம் 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை அளித்தனர். இதேபோல் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.

இந்த நிலையில் விக்கிரவாண்டியில் போட்டியிட திமுக தரப்பில் நேற்று விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், இன்று வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் விருப்ப மனு அளித்தனர். பொன்முடி மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி, திமுக சார்பில் கட்சியின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.