சென்னை: கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் தீபாராதனை தட்டில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை பணம் கோவிலுக்கு என அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை அறநிலையத்துறை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது.

கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள், அங்குள்ள தெய்வங்களுக்கு பூஜை செய்து, ஆரத்தி காட்டி அதை பொதுமக்களுக்கு காண்பித்து, திருநீறு மற்றும் பிரசாதங்கள் வழங்கி வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு பக்தர்கள் குறைந்த அளவில் காணிக்கைகள் செலுத்துவது காலம் காலமாக நிகழ்ந்து வரும் சம்பிரதாயமாக உள்ளது. இதுபோன்ற காணிக்கை விசேச நாட்களில் சற்று அதிகமாகவும் சாதான நாட்களில் குறைவாகவே கிடைக்கும்.
குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வரும் அர்ச்சகர்களின் வாழ்வாதாரத்துக்கு இந்த காணிக்கைகள் சற்று உதவியாக இருந்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை, அந்த அர்ச்சர்களின் காணிக்கையிலேயும் கைது வைத்தது. அதாவது, அவர்களின் ஆரத்தி தட்டில் வைக்கும் காணிக்கையை அங்கு பணியில் இருந்து காவலர்கள் கண்காணித்து, அதை எடுத்து கோவில் உண்டியலில் போட வேண்டும் என திடீரென உத்தரவிட்டது.
அதாவது, கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், தங்களது ஆரத்தி தட்டில் வைக்கப்படும் காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும், காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் அதிகாரி ‘உத்தரவு பிறப்பித்திருந்ததார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மதுரை நேதாஜி சாலையில் தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயல் அலுவலர் அங்கயற்கண்ணி என்ற திமீர் பிடித்த பெண் அதிகாரி, இந்த கோவிலில் பணியாற்றுபவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்த உத்தரவிடப்பட்டது. அவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை கோவில் பணியாளர்கள் கவனிக்க வேண்டும். காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த உத்தரவானது, இந்து சமய அறநிலையத்துறை கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்கள் மத்தியலும் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. மேலும் அறநிலையத்துறையின் நடவடிக்கை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்பட்டது. அரசின் இந்த செயலுக்கு பதில், பிச்சை எடுக்கலாம் என்று சமூக வலைதளங்களில் காட்டமாக விமர்சிக்கப்பட்டது. அதுபோல கிறிஸ்தவ ஆலயங்களிலும் போதகர்கள் தட்டு மூலம் காணிக்கை வாங்குகிறார்களே, தசமபாகம் என்ற பெயரில் பணம் வசூலிக்கிறார்களே அதை பிடுக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது,
இந்த நிலையில், கோவில் அர்ச்சகர் தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி உண்டியலில் செலுத்தும் உத்தரவு திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த கோவில் கோவில் தக்காரிடம் கலந்தாலோசிக்காமல் செயல் அலுவலர் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றறிக்கை தொடர்பாக தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இந்து கோவில்களையும், கோவில்களுக்கு உரிய சொத்துக்களையும் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. கோவிலுக்கு பொதுமக்கள் கொடுக்கும் நன்கொடைகள் போன்றவை மற்றும் கோவில் சொத்துக்களில் இருந்து வரும் வருமானங் களை கோவிலுக்கே செலவு செய்ய வேண்டும் என விதி இருக்கையில், அதை மீறி கோவில் வருமானங்களை தேவையற்ற மற்ற காரியங்களுக்காக அறநிலையத்துறை செய்து வருகிறது. மேலும் கோவிலில் பணியாற்றி வரும் அர்ச்சகர் உள்பட ஊழியர்களுக்கு குறைந்த அளவிலேயே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கோவில்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. அதுபோல வருமான வராத கோவில்களிலும் எந்தவொரு பணிகளும் அறநிலையத்துறை சார்பில் செய்யப்படுவது இல்லை. இதனால் பல கோவில்களின் புணரமைப்புக்கு உதவுங்கள் என அந்த பகுதி மக்கள் மற்றும் கோவிலில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஆனால், அறநிலையத்துறையோ, பொதுமக்கள் மனமுவந்து அர்ச்சகர் தட்டில் போடும் சில்லரைகளையே பிடுங்க நினைப்பது, திமுக ஆட்சியின் அலங்கோலத்தை வெளிக்காட்டி உள்ளது.